பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 48 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


யாரையாவது அழைக்கலாம் என்றால் வாயுமில்லை. என்ன செய்வான்?


போட்டியிடும் போது, இது போன்ற சூழ்நிலை சில சமயங்களில் நேர்ந்து விடுவதுண்டு. அதாவது போட்டியை நடத்துபவர்கள், அல்லது போட்டியின் நடுவர்கள், அல்லது தாங்கள் ஜெயித்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கும் அநியாயக் காரர்கள், விதிகளை தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்டு வெற்றி பெற்று விடுவார்கள்.


இதைத் தடுக்க விரும்பினாலும் சுற்றுப்புற சூழ்நிலை கள் சாதகமாக இல்லாத காரணத்தால், தோல்வி யடைவதைத் தடுக்க முடியாமற் போய்விடும்.


எனவே, வாழ்க்கையிலும் விளையாட்டிலும் இது போன்று தடுக்க முடியாத தோல்விகள் ஏற்படும். இவை சகஜமே!


3. எதிர்பாராத தோல்விகள் (Accidental Defeats)


ஒரு ஒலிம்பிக் போட்டியில், கூடைப்பந்து இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் மோதிக் கொண்டன. பல ஒலிம்பிக் பந்தயங்களில் தங்கப் பதக்கங் கள் வென்ற அமெரிக்க அணி, இறுதி வரை வெற்றி எண் களில் ஒன்று அதிகமாகவே பெற்றிருந்தது.


ஆட்டம் முடிய ஒரு நொடி இருக்கும் பொழுது, ரஷ்ய ஆட்டக்காரர். வீசி எறிந்த பந்து வளையத்துள் விழுந்து 2 வெற்றி எண்களைத் தந்து விட, ரஷ்யா வென்றது. அமெரிக்கா தோற்றுவிட்டது.