பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


1. போட்டியில் தோற்று விட்டால், பொறுமையுடன் ஏற்க வேண்டும். ஆத்திரப்படாமல், உணர்ச்சிவசப் படாமல், ஏன் தோற்றோம் என்பதை நிதானமாக எண்ணிப் பார்க்க வேண்டும்.


2. தோல்வியை கேவலமாக எண்ணிவிடக்கூடாது. பிறர் பரிகாசம் பண்ணுவார்கள் என்பதை பெரிதுபடுத்திக் கொள்ளவும் கூடாது. மனம் வேதனையடையும் என்பது உண்மை தான் என்றாலும், தோல்வியை எளிதாக, சிறிது என்று எண்ணித் தாங்கிக் கொள்கின்ற வீரமனம் வேண்டும்.


3. தோற்றுப் போவதற்கு சில காரணங்கள் உண்டு. எதிர்த்து ஆடுபவர்கள் திறமையை மிக எளிதாக மதிப்பிட்டு விடுவது; தனது திறமையை பல மடங்கு பெரிதாக எண்ணித் தலைக்கணம் கொள்வது; நிதானத்தை இழந்து, பதட்டப் படுவது; எதிர்த்தாடுபவர்கள் வெற்றி பெறுகிற தருணம் வருகிறபொழுது, அவர்கள் மேல் ஆத்திரப்படுவது; தொடர்ந்து போட்டியிடுகிற துணிவினை இழந்துபோவது


இவற்றையெல்லாம் தவிர்த்திட முயலுதல் வேண்டும்.


4. தோல்வி என்றவுடனேயே, தன்னை மற்றவர்கள் தோற்கடித்து விட்டார்கள் என்று, காரணங்களுக்காகத்


தேடி அலைவது, பலரது பண்பாக இருக்கிறது.


தோற்பது ஒன்றும் கேவலமுமல்ல. பாபச் செயலுமல்ல.


தோல்வி ஒருவருக்கு அனுபவமாக அமைகிறது. வேறு சிலருக்கு உண்மையை வெளிப்படுத்திக் காட்டியுள்ளி’ நோயைப் போக்கும் மாமருந்தாகவும் பயன்படுகிறது.