பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருமணத்தி ற்குப் பின்னால்


-- = Ho _


கல்யாணம் என்பதை ‘கால் கட்டு’ என்பார்கள். அதா வது தன்னிச்சையாக, விருப்பம் போல் எதிலும் இறங்க முடியாது என்பதால்.


கல்யாணத்தை துன்பச் சாகரம் என்பார்கள். அதில் விழுந்து விட்டால், கரையேற முடியாது. அவற்றைச் சமாளிக்கவே சக்தியெல்லாம் போய்விடும் என்பதால்.


கல்யாணம் செய்து விட்டால், வாழ்க்கையே அவ்வளவு தான். வீரதீரமாக எதுவும் செய்துவிட முடியாது என் பார்கள்.


நம் நாட்டவரின் நினைப்பும், நடப்பும், முடிப்பும், இப்


படியேதான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.


ஆனால், திருமணம் என்பது வாழ்வில் நடைபெறும் வழக்கமான காரியங்களில் ஒன்று.