பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா,


ஒழுங்காக உடலைக் காத்து வந்தால், திருமணத்திற் குப் பிறகுதான் திறமைகள் வளர்கின்றன. தேர்ச்சிகள் பெருகுகின்றன. சாதனைகள் நிமிர்ந்து கொள்கின்றன என் பதை மேல்நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பலமுறை நிருபித்துக் காட்டியுள்ளனர். s


கிரிஸ் இவார்ட் எனும் அமெரிக்க நாட்டு டென்னிஸ் ஆட்ட விராங்கனை, லாய்டு என்னும் இங்கிலாந்து வீரரை மணம் செய்து கொண்ட பிறகும் பெறற்கரிய பல வெற்றி களைப் பெற்று, உலகையே வியப்பிலாழ்த்தியிருக்கிறார்.


ஒரு மாமாங்க காலத்திற்கு மேல் ஆடி வரும் மணமான மங்கை, இன்று பெண்களில் தலை சிறந்த, முதல்தர ஒன்றா வது ஆட்டக்காரியாகத் திகழ்ந்து இருக்கிறார்.


1982ம் ஆண்டு டென்னிஸ் ஆட்டத்தில் அவர் சம்பா


தித்த தொகை 6,39, 480 ஷில்லிங். இந்த ஆண்டு அவரது வருமானம் 6,92,589 வில்லிங். -


கல்யாண வாழ்வு, வயதாகும் காலம். இவையெல்லாம் இந்த வீராங்கனையின் வெற்றியை வழி மறிக்க வில்லையே!


ஒழுங்கான திட்டம், ஒழுக்கமான வாழ்வு, உன்னத மான பயிற்சி, உயர்ந்த இலட்சிய வேட்கை, உலகப் புகழை யும், சிறந்த செல்வத்தையும் வழங்கும். உண்மைதானே


இது!


உயரம் தாண்டலில் புதிய சாதனை


ஆண்கள் உயரத் தாண்டும் போட்டியில், சோவியத் நாட்டைச் சேர்ந்த வீரர் ருடால்ப் பவாமிஸ்டின் என்பவர் ஒய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் தான்’ உயரம் 2. 40 மீட்டர் ஆகும்.