பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தாயாகி விட்டால் திறமை குறைந்து விடுமா?


தாயாகி விட்டால் திறமை குறையுமா? என்று கேட் டால், குறையாது என்கிறார்கள் வல்லுநர்கள்.


குறையவே குறையாது என்கிறார்கள் வீராங்கனைகள்.


திறமை குறையாமல் மேலும் மேலும் வளரும் என்கி றார் அமெரிக்க நாட்டு வீராங்கனை எவ்லின் ஆஷ்போர்டு.


நீக்ரோ இனத்தில் தோன்றிய நிலா நங்கை, நூறு மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் உலக சாதனை படைத்த எவ்லின் கூறுகிறார், என் திறமையும், உலக சாதனையும் நிகழ்த்திய முதன்மையும், என் மகன் ரெய்னா பிறந்தபிறகு தான்’ என்று கூறும் போது, அந்த உண்மை அற்புத ஒளி யாக அவர் முகத்தில் பளிச்சிடுகிறது.