பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி I 77 -


அறிந்து, Gsrai 6 sp (Kinesthetic Awareness) plorfi Gjib இகுத்திருப்பதாகவும் எவ்லின் கூறுகிறார்.


பிள்ளை பெற்றெடுத்த பெண்களுக்கு, இரத்தக் குழாய் கள் விரிந்து கொண்டு, தடையில்லா இரத்த ஒட்டம் விரை வாகச் செல்ல உதவுகின்றன என்பதும் ஒர் ஆய்வின் முடிவு.


அப்படிப்பட்ட இரத்த ஒட்டம், அதிகமான உடற் பயிற்சி, ஆர்வம், இலட்சியம், அவளுக்குள்ளே உயிர்த் தெழுந்து கிளம்பிய உற்சாகம் எல்லாம், எவ்லினுக்கு வெற்றியை நல்கியது. சாதனைகளைப் படைத்திட உதவியது. -


‘ஒட்டத்திற்காகச் செய்த உடற்பயிற்சிகள், போட்டி களில் பங்கு பெற வைத்ததுடன், உடலை அழகாகவும்: சிறப்பாகவும் தரமாகவும் வைத்துக் கொள்ள உதவியதுடன், வாழ்வில் நம்பிக்கை ஊட்டின, தன்னம்பிக்கையை வளர்த்தன. என்னை மகிழ்ச்சி பெற வைத்தன என்கிறார் எவ்லின்.


தாயாகிவிட்டாலும் திறமை குறையாது என்பதைவிட, திறமை வளரும் என்று சரித்திரச்சான்றாக விளங்குகிற எவ்லின் ஆஷ்போர்டு (Evelyn Ashford) உலகத்திற்கே வழிகாட்டி என்று நாம் தைரியமாகக் கூறலாம். -