பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 80 டாகடா எஸ். நவராஜ் செல்லைய, o


ஆகவே, வழி நடத்துகிற பண்புகளில் மட்டுமல்ல,


- * * o - - • ** * வாழ்வு தருகிற ஆற்றலில் மட்டுமல்ல, பெண்களுக்கு இயற்கையாகவே அளப்பரிய சக்திகளை இறைவன் கொடுத் திருக்கிறான். so


- -


-- o o


அப்படி என்ன இருக்கிறது?


பெண்களின் தேகம் அதிக வெப்பத்தையும், அதே சமயத்தில் அதிகக் குளிரையும் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை ஆணைவிட அதிகம் பெற்றிருக்கிறது. இந்த உலகில் சூழ்நிலைக் கேற்றவாறு அனுசரித்து வாழ்வதற் கேற்ற ஒப்பற்ற ஆற்றலையும் இயற்கை அளித்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். o


மனப்போராட்டமாக இருந்தாலும், பொருளாதார சீர்கேடாக இருந்தாலும், சுற்றுப்பற் சூழ்நிலைகளின் தொந்தரவுகளாக இருந்தாலும், பெண்கள் ஏற்று, pர னித்து விடுகின்றார்கள். அவர்களை அதிகமாக அவர்கள் ஆட்டிப்படைப்பதில்லை என்று வாழ்வியல் நிபு கள் விளக்குகின்றார்கள்.


ஆண்களை விட பெண்களின் இதயம் அளவில் சிறியதாக இருந்தாலும், இதய நோயே அதிகம் வராத அளவுக்கு அது வலிமையான இதயமாக அமைந்திருக்கிறது.


குழந்தைகளைப் பெறுகிற பெண்களின் இருதய இரத்தக் குழாய்கள், அதிக அகலத்துடன் இருப்பதால் முதுமைப் பருவம் வரை, அவர்களுக்கு பெரும்பாலுP மாரடைப்பு ஏற்படுத்துவதில்லை என்று அண்மையின் ஆய்வறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.


பெண்கள் உடலில் சுரக்கின்ற சுரப்பிகள், மண்டலங்கள் யாவும், சிறப்புச் சக்தியைப் பெற்றுத் தருகின்றன.