பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பெண்கள் பங்கு பெறாத விளையாட்டுப் போட்டிகளே இல்லை. கடுமையான வேகம், மிகக் கொடுமையான குழப்பம் மிகும் விதிகள் கொண்ட ஆட்டம் என்று கூறப்படுகிற கூடைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு, ஆண்களுக்கு நிகராக விளையாடி இன்று கொடிகட்டிப் பறக்கின்றார்கள்.


40 நிமிடங்களில் 7 மைல் தூரம் நடந்து, ஒடி விளை யாடுகிற ஒரு விரைவான ஆட்டத்தில், பெண்கள் தாக்குப் பிடிக்கின்றார்கள். ஆண்களை விட பெண்களே அற்புதமாக ஆடுகின்றார்கள். நுணுக்கம் நிறைந்த நுண்மையான ஆட்டம் ஆடுகின்றார்கள் என்று ஆண்கள் பயிற்சியாளர்களே ஆச்சரியப்பட்டு நிற்கின்றார்கள். -


ஒட்டப் போட்டிகள் என்றால் 100 மீட்டர் தொடங்கி, 26 மைல் 385 கெஜ தூரம் உள்ள மாரத்தான் ஒட்டம் வரை, பெண்கள் ஆதிக்கமே மேலோங்கி வருகின்றது.


நீரில் அமுக்கிய பலூன், வெகு விரைவாக நீருக்கு. மேலாக வெளிவந்து நிற்பது போல, வாழ்வின் அடித் தளத்தில் அடிமையாக்கப்பட்டுக்கிடந்த தாய்க்குலம், இன்று: சாதிக்கும் சந்ததியினரை உற்பத்தி செய்து சிறந்து நிற்கிறது.


எங்கும் பெண்கள், எதிலும் பெண்கள், எல்லாமே பெண் கள் என்று நீக்கமற நிறைந்து நிற்கும் பெண்கள், விளை! யாட்டு உலகில் சாதனைகளைப் படைத்துவிட்டு, சரித்திரம்: எழுதுகின்ற நிலைமையை சீர்தூக்கிய ஆராய்ச்சியாளர்கள்,


பெண்கள் படைக்கும் சாதனைகள் ஆண்களை விஞ்சி


விட்டன என்கிறார்கள்.


நமது நாட்டிற்குத் தங்கம் குவித்து வந்த வீராங்கனை பி.டி. உஷா நமது கூற்றுக்கு ஒரு சான்றாக அமைந்திருக்க வில்லையா 1988ல் நடைபெறும் ஒலிம்பிக் பந்தயமும் நமக்கு ஒரு விளக்கமாக அமையப் போகிறது!