பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, is ow


கி. -க்கும் மனித சக்தி 185


ஏன் இந்தப் பழக்கம்


பெண்கள் புகைப்பது மன அமைதி பெறுவதற்காக , ன்பதாக ஒரு நம்பிக்கை என்கிறார்கள்.


பல்வேறு காரணங்களுக்காக, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறபொழுது, புகைக்கும் பழக்கத்தில் விழுந்து விடுகின்றார்கள் என்கிற காரணமும் ஒன்று.


நல்ல உடல் நலம் வேண்டும் என்பதற்காக ஆண்கள் இந்த முயற்சிகளை மேற் கொள்வதும் உண்டு. அதனால், குறைந்த எண்ணிக்கையில் புகைக்கும் பழக்கத்தில் உலா வருகிற ஆண்கள் கூட்டமும் உண்டு.


அதுபோலவே, பெண்களும் தங்கள் அழகையும் ஆடம் பரத்தையும் வெளிப்படுத்திக் காட்ட, புகைக்கும் பழக் கத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதாகவும் காரணம் கூறுகின்றார்கள். --


சில பெண்கள், தாங்கள் புகை பிடிப்பதால் தான் உடல் கட்டோடு, பார்ப்பவர் வியக்கும் அழகோடு இருக்கிறோம் என்ற தற்பெருமை நிறைந்த நம்பிக்கையில் இருக்கின்றார்கள் என்றும், புகைப்பதை விட்டு விட்டால், உடற்கட்டுப் போய் விடும் என்று நம்பியே, புகைப்பதைத் தொடர்கின்றார்கள்.


இன்னும் சில பெண்கள், தற்காலிகமாக புகைப்பதை நிறுத்தி விட்டு, பிறகு உடல் எடை கொஞ்சம் வேண்டு மென்றால், மீண்டும் புகைக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பதாக காரணங்களை அடுக்கிக் கொண்டு போகின்றார்கள்.


ub~~ l 2