பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 88 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நிறைய இருக்கின்றன. என்றாலும் பெண்களை நோக்கி. விளம்பரம் போவதில்லை.


துரையீரல் புற்று நோய் ஆண்களுக்கு வருகிறது. என் கிற அபாய அறிவிப்பு மட்டுமே ஆண்களை நோக்கி வரு


கிறது.


பெண்களுக்கோ தாய்மைப் பேறுள்ள காலத்தில்; தாக்குகின்ற நோய்களைப் பற்றி விரிவான விளம்பரங்கள் வருவதில்லை. எச்சரிக்கையும் எழுவதில்லை.


அபாயம் அதிகம்


தாய்மைக் காலத்தில், பெண்கள் புகைக்கிற போது, கர்ப்பச் சிதைவு ஏற்பட்டு விடுகிறது சில சமயங்களில்


குழந்தை கருப்பையில் இடம் மாறி துன்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.


புகைக்கும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எடையில் குறைவாக, அளவில் சிறியதாகப் பிறந்து, உயிர் பிழைக்க மன்றாடும் கோரக் காட்சிகளுக்கும் ஆளாகி விடு கின்றன. *


புகைக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, டான்சில் எனும் தொண்டை நோய் ஏற்படுகிறது. அத்துடன் அடினாய்ட் என்பதாக, மூக்குப் பகுதியின் பின்புறத்தில் வளர்கிற தசை நோய்களுக்கும் ஆட்படுகிற அபாயங்கள் நிறையவே உள்ளன.


இப்பொழுது புதிதான ஒர் உண்மையை அறிஞர்கள் கண்டு பிடித்திருக்கின்றார்கள். அதாவது, புகைக்கும் பெண்கள் பலருக்கு விரைவில் மாதவிடாய் நின்று போகிறது. என்பதுதான். . . .