பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் புறத்தில் வாழ்ந்த அந்த முதிய இளைஞர்) எளிய உணவு வசையையே உண்டார். மூன்று வேளைகளுக் உண்டார். அவற்றை ஜீரண உறுப்புக்கள் ஏற்றுக் கொண் டன. சிரமமின்றி பணியாற்றின. உடலும் உறுதியாக 1 tir m}&# கொண்டது.


கிராமப்புறத்திலிருந்து பட்டணம் போன அந்த முதியவர், பலரைப் பார்த்து தன் பழக்கங்களை மாற்றிக் கொண்டார். சுவையாக இருசி கிறதென்று மாமிசங்களை நிறைய உண்டார். அதற்குத் துண்டுதல் தரும் மது வகை களை மிகவும் மோகித்தார்.


கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வசைகள், மது சுவைகள் அவரது உள்ஸ்ரீப்புக்களைப் பாதித்தன. நுரை வீரலில் அடைப்புக்களை ஏற்படுத்தின. உடலின் நிலை மாறியது. பட்டணத்து அசுத்தக் காற்று வேறு அவரை மோசமாகப் பாதித்தது. i


முடிவு. தனது 152ம் வயதில் அவர் மரணமடைந்தார். தாமஸ் பார் என்ற அந்த மனிதரின் வாழ்வுக் காலம் 1483 முதல் 1634 வரை, இங்கிலாந்தில் லண்டன் நகரில் வாழ்ந் தவர்.


சாப்பிடக் கூடாததை அவர் சாப்பிட்டார். சுவாசிக்க வேண்டாததை சுவாசித்தார். தனக்கே தான் எதிரியானார். தன்னையே வீழ்த்திக் கொண்டார்.


அதனால்தான் என்னைப்பார் மனிதர்களே என்று தாமஸ்பார் அழைக்கிறார்.


தேகம் என்பது அற்புதமானது. அதிசயமானது. தங்க முட்டையிடும் வாத்து என்று கூட நாம் கூறலாம்.