பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


um siar sahi-l-ib (Hopsctotch)


சில்லு என்பது உடைந்து போன ஒரு சிறு ஒடு, அந்த ஒட்டை ஒரு வட்டத்துக்குள் போட்டு விட்டு, கோட்டின் வெளியே ஒரு காலால் நின்று, தாவி, அதே காலால் சிறு ஒட்டை மிதித்து, அதை செதுக்கித் தள்ளி வெளியே அனுப்ப முயற்சிக்கும் விளையாட்டு, அங்கே சிறப்பான


இடத்தைப் பெற்றிருந்தது.


நம் நாட்டில், பெண் குழந்தைகள் பெரிதும் விரும்பி ஆடுகிறஆட்டமாக இருப்பதை, நீங்கள் ஒப்பிட்டு மகிழலாம்.


தோலால் ஆன பந்துகள்


பந்துகள் தோல்களால் உருவாக்கப்பட்டவையாக இருந்தன. பந்துகளை உயரமாகத் தாக்கித் யெறிந்து, அல்லது அதிக தூரத்திற்குத் தூக்கியெறிந்து ஆடுகிற ஆட்டங்கள், அதிக அளவில் விளையாடப் பெற்றன.


தந்திர கையசைவுகள் (Juggling)


கையசைவுகளில் தந்திரமான முறைகளைப் பின்பற்றிக்


காண்பவர்களை, மகிழ்ச்சிப் படுத்துகிற வேடிக்கைக் காட்டுகிற அபிநய விளையாட்டுக்கள் மக்கள் மத்தியில் புகழ்


பெற்றிருந்தன.


ஆனால், அந்த காலத்தில், பந்தை அடித்தாடும்


மட்டைகள் (Bats), ராக்கெட்டுகள் போன்றவைகள் இடம் பெறவிலலை.


கோலிக்குண்டு ஆட்டம்


தரையில் ஒரு சிறு குழியைத் தோண்டி விட்டு, கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டு, கோலிக்குண்டுகளை உருட்டி,