பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


161b 40th


சுவையான பதினாறு என்று பதினாறு வயதைப் புகழ்ந்து பேசுவார்கள். அதை நாம் வலிமையான பதினாறு என்றும் பேசலாம்.


பதினாறு வயது மங்கையொருத்தி - உல்ரிக் மே பெர்த். என்னும் மேற்கு ஜெர்மனி வீராங்கனை. உயரத் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாள்.


17 வயது அமெரிக்க இளைஞன் பாப் மத்யாஸ், லண்ட னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், டெக்காதலான் போட் டியில் தங்கப் பதக்கம் வென்றான்!


13 வயதில் மெஜோரி கெஸ்டிரிங் எனும் அமெரிக்க? சிறுமி நீச்சல் குளத்தில் முக்குளிக்கும் போட்டியில் (diving) தங்கப் பதக்கம் வென்றாள்.


இப்படிப் பட்டியல் எழுதிக் கொண்டே போனால், இவையாவும் இயற்கையாய் அமைந்த வெற்றிகளாகவே இருக்கும். ஆனால், எதிர் நீச்சல் போட்டு பெறுகிற, வெற்றி தானே பெருமைக்குரியது!


வயதாகிக் கொண்டே போனாலும் விளையாட்டுக்களில் வெற்றி பெறுவதும், வரலாற்றுச் சாதனை புரிவதும் நீடிக் கிறது என்றால், அது வலிமையால் தானே!


முதிர்கிற வயதிலும் முடிந்து போகாமல், வளர்ந்து வரும் இளமை வேகத்தை விளையாட்டுத்துறை நிகழ்த்திச் காட்டி, நேர்முகமாக உலகுக்குக் காட்டுகிறதே அந்தப் புதுமையால் தான், விளையாட்டுக்கள் காலங்காலமாசி மக்களினத்தைக் கவர்ந்திழுத்துக் கொண்டே வருகின்றன . தொடர்கின்றன. வளர்கின்றன.