பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அவர் 1961ம் ஆண்டு நீந்தி முடித்த நேரம் 15 மணி. அப்பொழுது அவரது வயது 55.


ஒர் அமெரிக்கர், பெயர் வால்டர் பொயரிச். வயது 64. அவர் 207 கிலோ மீட்டர் தூரத்தை 34 மணி நேரம் 15 நிமிடங்கள்:நீந்தி, ஒர் உலக சாதனையை நிகழ்த்தினார். அவரது வயது 64.


இன்னும் இருக்கிறது.


இப்படிப் பட்ட சான்றுகள் இன்னும் நிறைய இருக் கின்றன.


நாற்பது வயதாகி விட்டால் நாடி தளர்ந்து விடும். நாலும் முடிந்து விடும், என்று வாடி வதங்கிப் பேசுகின்றவர் கள், இந்த வீரம் நிறைந்த வெற்றிகளைப் பார்க்க வேண்டும்.


உடலிலே உரம், உள்ளத்திலே எழுச்சி, உழைப்பில் திறம், களைப்பு விரைவில் வராத பலம், உடலில் ஊறிச் கொண்டுதான் இருக்கும்.


நல்ல பழக்க வழக்கங்களுடன், இலட்சியம் நிறைந்த சிந்தனைகளுடன், உன்னதமான உடற்பயிற்சிகளையும் செய்து, உணவும் உரிய முறையில் உண்டு வந்தால், இளமை யின் வேகம் எள்ளத்தனையும் குறையாது என்பதைத்தான் மேலே கூறிய வீரர்கள் மெய்ப்பித்துக் காட்டியிரு’ கிறார்கள்.


நமக்கெல்லாம் உடலைப் பயன்படுத்திக் கொள்ள: தான் தெரிகிறதே தவிர, பத்திரப் படுத்திப் பண்பு-” பாதுகாத்து வாழத் தெரியவில்லை.


பத்திரமாகப் பாதுகாத்து, பலம் பெறத்தக்க u களையும் செய்து கொண்டு வாருங்கள். 40 லும் நிற்கலாம். 50லும் அரிய காரியங்களை ஆற்றலாம். 60 ஆன்ற புகழ் பெறலாம்.