பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நாம் ஏன்


விளையாடுகிறோம்?


ஆட்டமும் நோக்கமும்


ஆட்டம் என்பது விதிகளுக்கு உட்பட்ட, அதிகமான உடல் இயக்கங்களை உடையது. பல்வேறு விதமான திறமைகளை ஒன்றுபடுத்தி, ஒரு சிறந்த குறிக்கோளுடன் முன்னேறிச் செல்லும் ஊக்கம் அளிப்பது. விடாமுயற்சியை வளர்க்கும் முக்கியத்துவம் கொண்டது. அதாவது, எல்லா விதமான உறுப்புக்களின் இயக்கமும், உற்சாகமான முயற்சியும், மனதுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் தரும் சிறப்பினைப் பெற்றிருப்பதாகும்.


ஆட்டத்தின் நோக்கத்தை மேற்கூறியவாறு விளக்கிக்


காட்டுவார்கள் விளையாட்டு வல்லுநர்கள்.


<5, விவரம் தெரிந்தவர்கள் மட்டுமல்லாது, சாதாரண மக்கள் கூட, விளையாட்டு என்றால் விரும்புகி றார்கள். விரும்பி வேடிக்கைப் பார்க்கின்றார்கள். விளை யாடுகிறார்கள். அல்லது விளையாடவாவது முயற்சித்து இன்பம் காணுகின்றார்கள். என்பதற்கு இவையே காரண மாக அமைந்திருக்கின்றன.