பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 & டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


எலும்புகளுக்கு D வைட்டமின் சத்து குறையும்போது, தான். வலு குன்றிப் போகிறது. எலும்புகளுக்குக் கனமும் சக்தியும் குறைகிறபோது, அவை வலுவிழந்து போவதால், வளையத் தொடங்குகின்றன. அதனால் தான். மனிதர் களுக்கு கூன்முதுகு வருகிறது. வளைந்த முதுகும் வந்து விடுகிறது. -


ஆகவே, முதுமையானது பல இடங்களில் பலமாகத் தாக்கி தான். உடலை பாழ்படுத்தி விடுகின்றது. அப்படி யென்றால் முதுமையைத் தடுக்க முடியுமா, விரட்ட முடியுமா என்று கேட்டால், முடியும். i


இதற்கு ஒரு உவமையை நாம் பார்ப்போம்.


ஒரு குளம் அல்லது ஏரி இருக்கிறது. அந்தத் தண்ணிர் பரப்பு முழுவதும் பாசி படர்ந்து கிடக்கிறது. தண்ணிரைப் பயன்படுத்த விரும்புவோர், பாசியை முன்புறமாகத் தள்ளி விட்டு, உபயோகிப்பார்கள். அதற்குள் தள்ளப்பட்டு விட்ட பாசி, மீண்டும் கரை நோக்கி வரும்.


மீண்டும் மீண்டும் பாசியைத் தள்ளுவதுபோல, மூட வருகிற முதுமையைத் தள்ளிவிடும் முயற்சியைத்தான், மனிதர்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிறோம். -


இப்படி முதுமையை விரட்டவும், இளமையைத் திரட்டவும் உதவுகிற ஒன்றுதான் உடற்பயிற்சி.


உடற்பயிற்சிதான், சுவாசத்தை அதிகப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை வேகப்படுத்துகிறது. கழிவுப் பொருட் களை அகற்றி, உடலைத் தூய்மைப்படுத்துகிறது. எலும்பு களை வலிமைப்படுத்துகிறது. தசைகளை உறுதிப்படுத்து


கிறது.