பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பிறந்த குழந்தை தவழ்ந்து, எழுந்து, நடந்து வளர்ந்து, வாலிபமாகி, இளமையில் திகழ்ந்து, முதுமைக்குள் புகுந்து, முதிர்ந்து, வளைந்து, ஒய்ந்து போகிறது என்பதெல்லாம், நாம் தினம் தினம் கண்டு உணரும் கண்கொள்ளாக் காட்சி களாகும்.


இந்தக் காட்சிகளில் இளமையை மட்டுமே எல்லோரும் விரும்புகிறோம். குழந்தைப் பருவத்தில் வாலிபக் கனவு’ அதிகம். அது பற்றிய பேச்சும், ஆவல் மிகுந்த எதிர் பார்ப்பும் அதிகம். அது பற்றிய மூச்சும், ஆவல் மிகுந்த எதிர்நோக்கும் அதிகம். ஆனால், வந்த வேகத்தில் இளமை வாழ்ந்து விட்டுப்போவதுதான், விந்தையாக இருக்கிறது.


இளமை வந்தவுடன், மக்கள் அதனை அதிக நாள் இருக்க விடுவதில்லை. இளமையைப் பயன்படுத்தி எல்லா விதமான இன்பங்களையும், ஒரே நாளில் உய்த்துத்துய்த்து விட வேண்டுமென்ற வெறியோடு வேலை செய்கின்றனர்.


எல்லோருக்கும் தான்


படித்தவர்களும் சரி, பாமரர்களும் சரி, இளமையை பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையை மறந்துவிட்டு, வந்த இளமையை நொடி நேரமும் விடாது பயன்படுத்திக் கொண்டாகவேண்டும் என்ற பரபரப்புடனேயே வாழ்ந்து தொலைகின்றனர்.


ஆமாம்! அருமையான இளமையை, அழித்துவிடுவ துடன், தொலைத்தும் விடுகின்றனர், இளமை தொலைந்த பிறகுதான், அறிவுக்கண் விழிக்கிறது. அனுபவக்கண் பழிக் கிறது. இளமை போன உடலைப் பார்த்து, இரத்தச் கண்ணிர் வடிக்கிறது.