பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 23


இளமையெனும் பொற்காலம்.


ஒரு நாட்டின் பொற்காலம் என்பது, மக்கள் அனை வரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகிற சூழ் நிலையுள்ள தாகும், எல்லாம் இருக்கிறது, எல்லாம் கிடைக்கிறது. எல்லாமே எதிர்பார்த்ததுபோல் நடக்கிறது என்கிற வசதி களும் வாய்ப்புக்களும் நிறைந்த காலம். அந்தப் பொற் காலமாகத்தான் இளமைக்காலம் எல்லாருக்கும் வருகிறது. வாரி வழங்குகிறது.


இந்த இளமை என்பது, பசுமையானது. காட்சிக்குக் கவர்ச்சியானது. செயலுக்கு வலிமையானது. சொல்லுக்கு இனிமையானது. நடப்புக்கு நன்மையானது. வாழ்வுக்கும் உண்மையானது.


இந்த இளமைக்கு வயது கிடையாது. ஆண் பெண் வேறு பாடு கிடையாது. ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் கிடையாது. இது இயற்கை தரும் சீதனமாகும்.


சீதனத்தைப் பெற்றுக் கொண்டு; சில்லறைத்தனமாக செலவழித்து விட்டால், சீரழிவு தான் முடிவு என்ற கதையும் நிலையும் நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை தானே!


எது வரை இளமை?


இளமை எந்த வயதில் கொடங்குகிறது? எந்த வயசில் போய் முடிகிறது? என்ற வினாவுக்கு இதுவரை பதிலே கிடையாது.


இளமை எந்த வயதிலும் தொடங்கலாம். இறக்கும் வரை. 100 வயது வரை கூட தொடரலாம். இளமைக்கு வயதே கிடையாது.