பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 டாக்டர். எஸ். நவராஜ் செல்லயைா

பதினைந்து வயது தான் இளமையின் ஆரம்பமா? கல்யாணம் முடிந்த பிறகு, முதுமை ஆரம்பமாகி விடுமா? பேரன் பேத்தி எடுத்து விட்டால், இளமை போய் தொலைந்து, முதுமை வந்து விடுமாம்? இப்படியெல்லாம் ஏறுக்கு மாறாகக் கேள்விகளைக் கேட்டு. தாறுமாறாகத் தர்க்கம் புரிந்து கொண்டு, தள்ளாடித் தடுமாறிக் கிடப்ப வர்கள் தான் இன்று நிறைய பேர்களாக நாட்டில் நடமாடு கின்றார்கள்.

‘நீங்கள் எப்பொழுது வயதாகி விட்டது என்று நினைத்து வருத்தப் படுகின்றீர்களோ . அப்பொழுதே இளமை கழிந்தது. முதுமை நிறைந்து கொண்டது’ என்பது அர்த்தம்.

ஆமாம்! நீங்கள் முதுமைக்குள் நுழைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

இளமையாக இருக்கிறோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டு செயல்படுகிற வரை, நீங்கள் இளைஞர்கள் தான். இளமையாளர்கள் தாம்.

மனம் தான் இளமையைக் காக்கும் ஆசான். உடலை தன்னிலையில் நிறுத்தும் சீமான். உங்களை நிமிர்ந்து நிற்க வைத்து விடும் பூமான்.

ஆக, மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டால், இளமை எப்பொழுதும் உங்கள் பக்கம் தான். உங்கள் கட்சி தான்.


உடலும் இளமையும்


உடலுக்கு இளமைத் தோற்றம் எப்பொழுதும் உண்டு. அந்த இளமைத் தோற்றத்தை எப்பொழுதும் கட்டிக் காக்க,