பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அதற்கு காரணம் இருக்கிறது.


எலும்புகள் இரண்டு இணைகிற இடத்தை நம் மூட்டு (loint) என்கிறோம் அந்த மூட்டுக்கள் உள்ள இடத்தில் தான். எலும்புச் சோறு (Marrow) என்பது இருக்கிறது.


அந்த எலும்புச் சோற்றில் தான் இரத்த அணுக்கள் 120 நாட்களுக்கு ஒரு முறை உற்பத்தியாகின்றன.


இரத்த அணுக்கள் தான், இரத்தத்தை செழுமையா க்கு கின்றன. இரத்தமோ உண்ணும் உணவிலும் பெறுகிற உயிர்க்காற்றிலும் உன்னத நிலையைப் பெறுகிறது.


சத்துள்ள அணுக்சளும், சத்துள்ள உணவு, பிரான வாயுவும் உடலில் உள்ள செல்களுக்கு இரத்தத்தால் தான் சென்றடைகின்றன. அதனால் தான், செல்கள் செழிப் படைந்து, செல் வளர்சிதை மாற்றத்தை சிறப்பாகச் செய்து முடிக்கின்றன.


எலும்பு வலிமை இழக்கிற போது, எல்லா வலிமையை பும் உடல் இழந்து போவது இதனால்தான்.


எலும்பின் வலிமைக்குக் கால்சியச்சத்துத் தேவை. கால்சியச் சத்து D வைட்டமின்னால் நிறைய கிடைக்கிறது. D வைட்டமின் மிக எளிதாக, சூரிய ஒளியிலிருந்து பெற முடிகிறது. விளையாடும் போது வெயில் நமக்குக் கொடுக் கிற வரப்பிரசாதம் இந்த D வைட்டமின். -


இப்படியாக இளமையைப் பெற, நாம் மேலே விவரித்த இரண்டும் எடுப்பாக உதவுகின்றன.