பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 2 Ho காரணம் உண்டு


எல்லோரும் விளையாடவும், விளையாட்டில் 11 பெறவும் முயல்கின்றார்கள் என்றால். காரணம ஒனறு தான் என்று கூற முடியாது. பலவுண்டு, ஏனென்றால், ஆகள் உடலால் பலவிதப் பட்டிருப்பது போலவே மனதா லும் பலவிதப் பட்டு, காரணத்தாலும் காரியத்தாலும் பல விதமாக பிரிந்து நிற்கின்றனர்.


விளையாட வருகிற சிலர், மற்றவர்களுடன் மோதி, உடல் திறனைக் காட்ட வேண்டும் என்று விரும்புவது உண்டு.


ஒரு சிலர், தன் மீது யாரும் தொடவே கூடாது, கை கால், துணி கூட படவே கூடாது என்று தனித்து


மேலும் சிலர், குறிபார்த்து எய்திட, இன்னும் சிலர் பிறர் பார்த்து வியந்திட காரியம் செய்ய வேண்டும் என்று கருதி, காரியமாற்ற வருவதும் உண்டு.


ஆனால், விளையாட விரும்புபவர்கள் பலர், ஒய்வு நேரத்தை உற்சாகமாகக் கழித்திட வேண்டும் என் பதற்காக, உடல் நலத்தில் மென்மேலும் சிறப்பு பெற வேண்டும் என்பதற்காக; இன்னும் சிலர் வந்த நோய் களைத் தடுத்து நிறுத்த; மேலும் வராமல் நோய்களைத் தடுக்க வேண்டும் என்பதற்காக விளையாடுகின்றார்கள். விளையாட வருகின்றார்கள்.


நாம் ஏன் விளையாடுகிறோம் என்கிற கேள்விக்கு விடையாக, இங்கே ஆறுவிதக் குறிப்புக்களைக் கொடுத் திருக்கிறோம். விளையாடுகிற நீங்கள் எந்தப் பிரிவில் இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இவை உதவும். உற்சாகம் ஊட்டும்.