பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.30 டாக்டர். எஸ். நவராஜ் செல் ைலயா


மிருகங்களுக்கு முடி நிறைய இருப்பது இயற்கை. மனித உடலுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம். முதலில் முடியில்லாத உடல், கோரைப் பற்கள் இல்லாத அழகான வரிசைப்பற்கள். கடினமான நகமற்ற அழகுநில்ை.


மிருகங்கள் உடலில் நிறைய முடி இருப்பது அவைகளுக்கு இயற்கையான பாதுகாப்பு. மனிதர்களுக்கு உடல் முழுதும் நிறைய மயிர் இருந்தால், அவரை குரங்குக்கும், கரடிக்கும் உதாரணம காட்டுகின்ற அவமான நிலை வந்துவிடுகிறது. ஆக, இந்த முடியைப் பற்றிய புராணத்தை, நாம் கொஞ்சம் முறையாகத் தெரிந்து கொள்வோம்.


எவ்வளவு முளைக்கும்


ஒருவருக்கு முடி எவ்வளவு முளைக்கிறது என்று விஞ் ஞானிகள் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்கள். அரிய ஆரரய்ச்சியல்லவா!


மூன்று நாளைக்குள் ஒருவருக்கு 1130 அங்குலம் அதாவது 1 மில்லி மீட்டர் நீளம் முடி முளைக்கிறது.


ஒரு வருடத்திற்குள் 5 அங்குலம் நீளம் அதாவது 12.5 செ.மீட்டர் நீளம் முடி வளர வாய்ப்பிருக்கிறது.


ஒருவருக்குப் பொதுவாக 3 அடி நீளம் வரை. முழு அளவு வளர்ச்சி பெறுகிறது என்றும் ஆய்வு செய்து அறிந் திருக்கிறார்கள் -


கணுக்கால் அளவு வளர கூந்தல் கொண்டிருக்கின்ற பெண்களையும் நாம் பார்த்திருக்கிறோம். ஜேன்.பர்போர்டு என்ற பெண் 8 அடி நீளம் முடி வளர்த்திருந்தாள் என்பது சாதனை என்று சாதனைப் புத்தகக் குறிப்பொன்று கூறு: கிறது.


+.