பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 3.3 I


தமிழ் நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதினத்தின் மடத் தலைவராக விளங்கிய கவாமி பண்டார சன்னதி ஒருவருக்கு; 8 மீட்டர் நீளம் அதாவது 26 அடிநீளம் முடி இருந்ததாக வரல rற்றுக் குறிப்பொன்று கூறுகிறது. அவரது வாழ்வுக் காலம் 1949ம் ஆண்டு அப்படி இருந்ததாக வரலாறு கூறுகிறது.


எப்படி இழக்கிறோம்!


முடி முளைப்பதும் பயிர் முளைப்பது போல; நம்மை யறியாமலேயே நம்முடலில் நடைபெறுகின்ற காரியம். ஆளால் வளர்ந்து இருந்து, திடீரென்று இழந்து போவது தான், வருத்தத்திற்குரிய விஷயமாகப் போய் விடுகிறது.


தலையில் முடியானது விழுந்து போவதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றார்கள் வல்லுநர்கள்.


நோய் தாக்குகிற பொழுதும், அதிகமான உணர்ச்சி வசப்படும் போதும், உணர்ச்சிகளால் தாக்கப்பட்டு மன நிலையில் தாக்கம் ஏற்படுகிறது போதும்: பெண்களுக்குத் தாய்மைப்பேறு ஏற்பட்டு பிரசவ காலங்களின் போதும், முடி கொட்டிப் போகிறது என்கிறார்கள்.


சில சமயங்களில் மன அதிர்ச்சிக்கு ஆளாகின்றவர் களுக்கு, ஒரு ராத்திரிக்குள்ளாக முடியெல்லாம் கொட்டிப் போவதும் உண்டு. அல்லாமற் போனால், ஒரு ராத்திரிக் குள்ளாக முடிபூராவும் நரைத்துப்போய் விடுவதும் உண்டு.


சான்றுக்கு தாமஸ்மூர் என்பவரைக் காட்டுவார்கள், 1835ம் ஆண்டு, அவரது தலை துண்டிக்கப்படும் என்ற தண்டனையைக் கேட்ட, அவரது முடி, ஒரு இரவுக்குள் தரைத்துப் போனதாக சரித்திரம் கூறுகிறது.