பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


முடிகள் முளைப்பது உடலின் வளர்ச்சியை மட்டுமல்ல இளமைக் காலத்தை எடுப்புடன் காட்டவும் உதவுகின்றன.


மூக்கிற்குள்ளே உள்ள முடி, தூசிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. கண்களில் உள்ள இமைகள், கண்போலக் காக்கின்றன. தட்பவெப்ப நிலையிலிருந்து உடலை முடி கள் காக்கின்றன. உணர்ச்சி நரம்புகளின் எழுச்சியைக் காட்ட, விறைப்பாகக் குத்திட்டு நின்று, வெளிப்படுகிற, (ரோமம் சிலிர்ப்பு) வித்தையையும் விந்தையையும் செய்து காட்டுகிறது.


வழுக்கையும் முடி யிழப்பும்


இப்படி உதவுகிற முடியானது, ஆண்களுக்கு மட்டும் விழுந்து போகின்றன. முடியற்ற தலையை வழுக்கைத் தலை என்கிறோம், இதற்கு வைத்தியமே இல்லை என்பது போல, என்ன காரணம் என்பதைக்கூட, மருத்துவ உலகம் அறிய முடியவில்லை. காரணம் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன.


வழுக்கை முளைத்து விடும் என்று வானளாவ விளம் பரம் செய்து, பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, பரிதவிக்க விடுகிற வைத்தியர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.


அவர்களை நம்பி ஏமாந்துபோய், மனம் நொந்த பேர்களும் நிறைய உண்டு.


ஆண்களுக்குத்தான் வழுக்கையும், சொட்டைகளும் நிறைய ஏற்படுகின்றன. இது இயற்கையின் கடுமையான கொடுமைதான். அது அவர்களின் ஆண்மையையோ,


ஆற்றலையோ, சிறிதும் பாதிப்பதில்லை.


ஆனால் ஒன்று. அவர்கள் அழகைக் கெடுக்கிறது என்று. அங்கலாய்த்துக் கொள்பவர்கள் தான் அதிகம். . .