பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.38 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அந்த விநோத மருந்துக்குப் பெயர்தான் விளையாட்டு.


உடற் பயிற்சி.


உடற்பயிற்சிக்கும் இளமைக்கும் என்ன சம்பந்தம் இருக் கிறது? அதெப்படி மருந்தாக முடியும்?


விருந்து விருந்து என்று உண்டு மகிழ்ந்து, தின்று கொழுத்து, நன்கு உடல் தடித்து. நடக்கவும் முடியாதவாறு நாலாவிதமான தொந்தரவுகளைத் திரட்டிக் கொண்ட பிறகு, அதிலிருந்து அதிசயமான அளவில் விடுபட வேண்டும் என்றால், வெறும் மருந்தும், வீரியமுள்ள ஊசியும் மட்டும் போதாது.


ஊசியும் மருந்தும் உள்ளுணர்வில் ஒருவித நம்பிக்கை யைத் தான் ஊட்டும். உருக்குலைந்து போய்விடுகிற உடற் கட்டை, நோய் தாக்கி நலிந்து போன நுண்ணிய உறுப்புக் களின் நீடித்த வலிமையை மீட்டுக் கொண்டு வர முடியாது. முடியவே முடியாது.


இனிதாக இயக்கம் நடத்தாத இதயம்; சுகமான அள வில் நடைபெறாத சுவாசம், விசையும் வீரியமும் குறை கின்ற தசைகள், கனமும் வலிமையும் இழந்து கூடாகப் போகின்ற எலும்புகள், நினைத்தாற் போல திடீரென்று செயல்பட முடியாமல் செய்கின்ற இயற்கையாக நடக்கும் செயற்கையான தடைகள் போன்றவைகள், வயதான முதுமை காலத்தில் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய் கின்றன.


நாடி தளர்கிறதே


அதனால் நாடி தளர்ந்து, நடை தளர்ந்து, வேகம்


தளர்ந்து, விவேகமும் தளர்ந்து, யூகம் கலைந்து, உற்சாகம்


குலைந்து, உணர்வுகள் நலிந்து, உடலும் மெலிந்து