பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 239


போகின்ற அளவுக்கு, முதுமை முரட்டுக் குதிரையாக மாறி, முரண்டு பிடிக்கிறது. பாடாய்படுத்துகிறது.


வயதாகும் போது ஏன் இந்த மாற்றம்? எப்படி ஏற்படுத்துகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்து கொண்டாக வேண்டும்.


இரத்தத்தை இறைத்து, ஏற்றமிகு செயலாற்றும் இத யத்தின் ஆற்றல், வயதாக ஆக, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது. அதாவது ஒவ்வொரு வருடம் கழிகிற போது, இதயத்தின் இறைக்கும் ஆற்றல் 1 சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. --


இளமைக் காலத்தில், கால் முதல் தலை வரையில் ஒடு கிற இரத்த ஒட்டத்தின் வேகம், சிறிது சிறிதாகக் குறை கிறது. அதாவது, ஒட்டத்தின் வேகம் 30 முதல் 40 சத விகிதம் குறைந்து இரத்தம் ஒடுகிறது.


கவாசிக்கையில், காற்றை உள்ளிழுக்கும் அளவானது வயதான காலத்தில் குறைவாகிறது. அதுபோல, உள்ளிருந்து வெளியேறும் அழுக்கான காற்றின் அளவும் குறைவாகவே இருக்கிறது.


இதனால், சுவாசத்தின் மூச்சிழுக்கும் ஆற்றல் குறைவ தானது, மார்புத் தசையானது நெகிழ்ச்சித் தன்மையை இழந்து விறைப்புத் தன்மை அடைந்து விடுவதே காரண மாகிறது.


நரம்புகள் மூலமாக செய்திகள் கொண்டு போவதும். முளைபாகத்திலிருந்து உறுப்புகளுக்குத் தரப்படுகின்ற செய்திகளைக் கொண்டு வருவதிலும் சிறிது காலதாமதம் உண்டாகி விடுகிறது.