பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கணக்காக, வருடம் முழுவதும் செய்கிறபோதுதான். உடலில் பயிற்சிகளின் பயன் படர ஆரம்பிக்கும்.


சிறிது சிறிதாகத் தான் சீரிய எதிர்பார்ப்புக்கள் தொடரும். ஆகவே, பயிற்சிகளை விடாமல் தொடர்ந்து செய்துகொண்டே வாருங்கள். உங்களுக்கு சளி, இருமல் போன்றவற்றின் அறிகுறி தோன்றினாலும் சரி, அல்லது உடல்நிலை சரியில்லாதது போலத் தெரிந்தாலும், பயிற்சியை நிறுத்திவிடுங்கள்.


நல்ல உடல்நிலை இருக்கும் பொழுது நிறுத்தாது தொடருங்கள். நிச்சயம் எண்ணம் ஈடேறும்.


4. வயதாகிறபோது; உடலில் பிடிப்பு, விறைப்பு நிறைய உண்டு. நீங்கள் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன் பாக, உறுப்புக்களைப் பதமாக்குகின்றதுபோல (Warmup). உடலை இயக்கி, பிறகுதான் பயிற்சிகளை செய்திட வேண்டும். அப்படிப் பதப்படுத்தும் போது இதயம் தசைகள் மற்றும் மூட்டுகள் எல்லாம் ஆபத்து எதுவும் நேராமல் காக் கப்படுகின்றன என்பது மிகவும் கவனிக்கவேண்டிய விஷய மாகும்.


5. எந்தப் பயிற்சியையும் செய்த வேகத்தில் நிறுத்தி விட்டு உடனே ஒய்வு எடுத்துவிடக்கூடாது. சற்று. தொடர்ந்து அதன்பிறகு தான், உடலை நிதானப்படுத்தி, வெப்ப நிலையிலிருந்து விடுவித்து, இயல்பான நிலைக்குக் கொண்டுவரவேண்டும்.


உலகத்திலே கோடிக்கணக்கான பேர்கள், இன்று ஒடு கிறார்கள். நீந்துகிறார்கள், சைக்கிள் ஒட்டுகின்றார்கள், இவைகள் இன்பமானவைகளே, இளமையைத் திருப்பித் தருபவையாகவும் இருக்கின்றன. அந்த இன்பத்தை நீங்களும் அனுபவியுங்கள். இந்த இன்பகரமான இயக்கங்களில் நீங் களும் கலந்துகொள்ளுங்கள். இளமையும் இன்பமும் வேண்டாம் என்பவர்கள் உண்டோ! பெறுங்கள். பேரானந்தம் அடையுங்கள். * F. *