பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஊதாரித்தனமான பொய்யைச் சொல்லி, தப்பிக்கப் பார்க்கின்றார்கள்.


பிறகு பயிற்சி செய்தால், வயிறு குறைந்து விடுகிறதே?


அதற்கென்ன பதில் சொல்வார்கள் அவர்கள்.


பொது மக்களைக் குழப்புவதற்காக இத்தகையப் பொய்கள் புறப்பட்டதால் தான், பயிற்சிகள் என்றாலே பயந்து கொண்டு மக்கள் ஒதுங்குகின்றார்கள்.


உண்மை நிலை இது தான் என்று யார் கூறுகின்றார்கள்:


எனவே, விளையாட்டும் பயிற்சியும் நல்ல பசியைத் தருகின்றன. அப்பொழுது சுவைத்து உண்கிறோம். பயிற்சியை செய்யாத பொழுது பசி இல்லாவிட்டாலும், பழகிய உணவின் அளவை விடாமல் சாப்பிடுகிறோம்.


அது தான் பழுதாகப் போய் விடுகிறது.


உணவு தினமும் தேவை. அது போல் தான் உடற் பயிற்சியும் விளையாட்டும். இரண்டையும் சமமாகப் பாவித் தால், சுகமாகவே வாழலாம். ஆமாம்! அழகான வயிறுடன் ஆனந்தமாக வாழலாம்!