பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கண்டறிய, பலர் பல விதமாகத் தங்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.


அவர்களில் யார் ஆற்றல் மிக்கவர்கள், சிறந்தவர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பாக, நாம் அந்த இருவரைப் பற்றியும் அவரவர் வாழ்ந்த சூழ்நிலைகளைப் பற்றியும் ஒரளவு தெரிந்து கொள்வது நல்லதாகும்.


இரண்டாவது ஜெசி ஒவன்ஸ்


1984 ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்சில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில், நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற கார்ல் லூயிசை, எல்லோரும் இரண்டாவது ஜெசி ஓவன்ஸ் என்று அழைத்தே பாராட்டத் தொடங்கினார்கள்


காரணம் : ஜெசி ஒவன்ஸ் ஒருவரால் தான் இப்படி வெல்ல முடியும், இனி யாராலும் இந்த சாதனையை மீற முடியாது என்று உலகமே கருதியிருந்ததால் தான் !


ஆனால், கார்ல் லூயிஸ் தன்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம். என் பெயராலேயே என்னை அழைத்தால் போதும் என்று அறிவிப்பு விடும் அளவுக்கு, ஜெசி ஒவன்சின் புகழ் மிஞ்சியிருந்தது.


கார்ல் லூயிசின் ஆத்மார்த்த குருவே ஜெசி ஒவன்ஸ் என்றால், ஜெசி ஒவன்ஸ் ஆற்றல் எப்படிப் பட்டதாக இருக்கும்? அதனை இங்கு காண்போம்.


ஜெசி ஓவன்ஸ்:


- ஜெசி ஒவன்ஸ் என்று அழைக்கப்பட்ட அந்த வீரரின் முழுப் பெயர் ஜேம்ஸ் கிளவ்ல்ேன்ட் ஒவன்ஸ் என்பதாகும்.