பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒட்டப்போட்டிகள் மாலை 3 மணிக்குத்தொடங்கியது. 3.15 மணிக்கு 100 கெஜதுாரம் ஒடி உலக சாதனை. 3.25 மணிக்கு நீளம் தாண்டலில் பங்கு பெற்று 26 அடி 8 அங்குலம் தாண்டி உலக சாதனை. 3.34க்கு 220 கெஜ தூரம் ஒடி உலக சாதனை. இருபது நிமிடம் கழித்து அதாவது 3.54க்கு தடை தாண்டும் போட்டியில் (Low Hurdles) கலந்து கொண்டு 22.6 வினாடிகளில் ஒடி, 11 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.


ஒரு மணி நேரத்திற்குள்ளாக போட்டிகளில் உலக சாதனை நிகழ்த்திய பெருமை யாருக்கு உண்டு? ஒவன்ஸைத் தவிர.


இனி கார்ல் லூயிஸ் பற்றி காண்போம்.


கார்ல் லூயிசின் முழுப் பெயர் பிரடெரிக் கார்ல்டன் லூயிஸ் என்பதாகும். 1961ம் ஆண்டு ஜூலை மாதம் ! ந் தேதி அல்பாமா மாகாணத்தில் உள்ள பர்மிங்காம் எனும் இடத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தில் உள்ள அனை வருமே விளையாட்டுக்களில் விற்பனர்களாக விளங்குகி கின்றார்கள்.


லூயிஸ் ஜெசி ஒவன்சினால் தான் உற்சாகப் படுத்தப் பட்டிருக்கிறார். ‘உன்னத உழைப்பும் அதற்கேற்ற அர்ப்பணிப்பும் உன்னை பரிசுக்கும். பாரட்டுக்கும் கொண்டு போய் நிறுத்தும் என்று ஜெசி ஒவன்ஸ் கூறிய வார்த்தை களை, முழு மனதுடன் ஏற்றப் பயிற்சி செய்து இன்று: புகழின் உச்சியில் வீற்றிருக்கிறார்.


6 அடி 2 அங்குலம் உயரமுள்ள லூயிசின் பயிற்சியாள டாம் டெல்லஸ்