பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. முதுகு வலியை முற்றவிடாதீர்கள் !


வருவது உறுதி !


இப்பொழுதே வரலாம். இனிமேலும் வரலாம்!.தப்பாது வரலாம். எப்பொழுதும் வரலாம் இந்த முதுகுவலி.


இளமையின் வேகமும் வலிமையும் கொஞ்சங் கொஞ்ச மாக விடைபெறும் பொழுது, விடாது வந்து முதுகில் ஏறி சவாரி செய்கிற அளவுக்கு வியூகம் அமைத்துக் கொள்கிறது முதுகுவலி!


ஐந்து பேர்களுக்குள் நான்கு பேர்களுக்கு இந்த முதுகுவலி தவறாது வந்து விடுகிறது. பலருக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது வந்து போகிறது.


வயதானவர்கள் முதுகு வலியின் காரணமாக, மருத்து வரிடம் முறையிடுவது, எண்ணிக்கையில் அதிகம் என்று கணக்கிட்டுக் காட்டுகின்றார்கள் வல்லுநர்கள்.