பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

27



அதனால்தான், விளையாட்டின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும், வழி முறைகள் செயல் முறைகள் வெவ்வேறு விதமாக அமைந்திருக்கின்றன.


மனப்புண்களால், மனத்திட்டங்களால், ம னி த த் தோரணைகளால் உடல் அமைப்புக்களினால், மனிதர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களாகவே விளங்கு கிறார்கள்.


ஒவ்வொரு மனிதரும், மற்றவர்களைவிட, தனிப்பட்டுத் தெரிய வேண்டும். சிறப்புற்று வெளிப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனால்தான், ஒவ்வொருவரின் ஆசைகளும், அணுகு முறைகளும் வெவ்வேறு வடிவங் களையும் விதங்களையும் விளைத்துக் கொண்டிருக்கின்றன.


ஏன் இவ்வளவு வேற்றுமையான வழிமுறைகள் என்றால், விளையாடுவதன் நோக்கம் உடல் நலத்திற்காக மட்டுமல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


உடல் நலம், தேகத்தின் திறம் என்பது மட்டுமல்ல. அதில் ஒருவித ‘தமாஷ் இருக்க வேண்டும். வேடிக்கை நிறைந்திருக்க வேண்டும். விபரீதங்கள் விளைந்தாலும் அவற்றில் ஒரு திரில் (Thrill) இருக்க வேண்டும், அழகைக் காண வேண்டும், அற்புதங்களை ரசிக்க வேண்டும் என்பதான பலவிதமான இலட்சியங்கள் இருப்பதால்தான்


விளையாட்டுக்களில் ஈடுபடும் முறைகள் வேறுபட்டிருக் கின்றன.


நீங்கள் விளையாடுகிறீர்கள், உங்களது நோக்கம் ஒன்றாக மட்டும் இருந்துவிடுவதில்லை. மேலே கூறிய பல * பனங்களும் ஒன்று சேர்ந்ததாகக் கூட இருக்கலாம்.