பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



எப்படியிருந்தாலும், நாம் (நீங்கள்) விளையாடும் போது, நிச்சயமாக நமது உடல் திறம் பெறுகிறது. உயர்ந்த நலத்தைப் பெறுகிறது. அதே நேரத்தில் மனத்தில் நிறைந் திருக்கும் உறுத்தல்கள், அழுத்தங்கள், படபடப்புக்கள், பதை பதைப்புக்கள் வெளியேறுகின்றன. உடல் ஒருவிதமான கனத்தன்மையை இழந்து தெளிவு பெறுகிறது. இலேசா கிறது, தேர்ச்சியடைகிறது.


ஆகவே, உடல் சுகத்திற்காக, மன சுகத்திற்காக, அந்தராத்மாவின் ஆன்ம சுகத்திற்காக நாம் எல்லோரும் விளையாடுகிறோம். என்றால் அதுதான் உண்மை.