பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 04 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அதிகாலை நேரத்திலும், வெய்யில் தாழ்ந்த மாலை நேரத்திலுமே விளையாட்டுப் போட்டிகள் நடத்தவேண்டும் ஒட்டப் பந்தய விழாக்களை நடத்திட வேண்டும் என்று பின்பற்றப்பட்டு, தொடர்ந்து செய்து வந்த காரியங்கள் எல்லாம், கண்மூடி, மண்மூடிப் போயின.


இன்று கிரிக்கெட் ஆட்டம் புகழ் பெற்றுக் கொண்ட பிறகு, மற்ற விளையாட்டுக்களில் முக்கியத்துவம் பெற்ற


இந்த காலை மாலை’ சங்கதிகள் எல்லாம், காற்றோடு காற்றாக கரைந்து போயின.


அதிகாலை வெயில் அகன்று, காலை வெயில் கனன்று எழத்தொடங்குகிற நேரத்தில் ஆட்டம் ஆரம்பமாகிறது. மத்தியானம், நடு உச்சி வெய்யில் நேரத்தில் கூடத் தொடர் கிறது, மாலையில், சூரியனின் அனல் வேகம் குறையத் தொடங்குகிறபொழுது, ஆட்டமும் முடிந்து விடுகிறது.


உச்சி வெய்யிலில் மனிதனின் நிழல் அவனது காலடியில் விழும். அந்த நேரத்தில் ரோட்டில் நடந்து போனாலே, நலி வடையும், சுகம் இழக்கும் என்பதால், ஓரடி நடவேன்’ என்ற பழமொழியையும் தந்து விட்டுப் போயிருக்கின்றார்கள் நமது முன்னோர்கள்.


ஆனால், கிரிக்கெட் ஆட்டம் போலவே மற்ற எல்லா விளையாட்டுக்களும், நல்ல வெயில் நேரத்திலும், நாள் முழுதும் நடக்தப்படுகின்றனவே! இது எப்படி?


வெயிலில் விளையாடினால், உடல் வீணாகும் என்ற தத்துவம் இன்று தடுமாறி நிற்கிறதே! எல்லாம் கிரிக்கெட் ஆட்டத்தின் கீர்த்தி போலும்! விளையாட்டு வீரர்கள் வெயிலை மட்டுமா எதிர்த்து நிற்கிறார்கள். இயற்கை நிலை யான உணவுப் பழக்கத்தையும் அல்லவா மாற்றி விட் டார்கள்.