பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒடுங்கள்! உலகப் புகழ் பெறலாம்!


உங்களைத்தான்!


பெருமைக்குரிய பள்ளி மாணவ மாணவியரே! இளைஞர்களே! இளமை தவழும் தேகத்திரே! ஏற்றமிகு தாகத்தீரே!


உங்களைத்தான் அழைக்கிறேன். உங்களுக்காகவே


இதை எழுதுகிறேன்.


உலகப் புகழ் பெற முடியுமா என்ற கேள்வி, உங்களுக் குள்ளே ஒளிந்துக் கொண்டு, கேள்வி கேட்டு கிளர்ச்சி செய்வது எனக்குத் தெரியும்!


முடியுமா என்ற கேள்வி முளைக்கும்பொழுதே, உங்கள் நெஞ்சிலும், நினைவுகளிலும் நம்பிக்கை நடை தளர்ந்து, இடை ஒடிந்து தள்ளாடி விழுவது போன்றவற்றை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது.


முடியுமா என்ற கேள்வி எழுகிறதே! அதற்குரிய பதில் முடியும் என்பதுதான்.