பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 & டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கணக்கான ரூபாய்கள் புரண்டு ஒரு பொருளாதாரப் புரட்சியையே விளைவிக்கின்றன.


ஒரு நாள் அல்ல, ஐந்து நாட்களானாலும் அமர்ந்து பார்த்து அகம் மகிழ்கின்ற சுகத்தில் திளைக்கின்ற மக்கள் கூட்டம் ஏராளம், ஏராளம்.


வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் தான் இந்த வேடிக்கை பார்க்கும் மக்களா என்றால், சத்துகளில் திரிகின்ற சிறுவர்களிலிருந்து, சாம்ராஜ்யத்தை ஆள்கின்ற கக்ர வர்த்திகள் வரை, நாள் கணக்காக இருந்து பார்க்கிறார் கள். பரவசமடைகின்றார்கள். அதைப் பற்றியே பேசு கிறார்கள் . ஆத்ம திருப்தி கொள்கின்றார்கள்.


வளர்கின்ற நாடுகள் வாழ வேண்டாமா?


சுறுசுறுப்பில்லாத நாடுகள், சுகபோகங்களில் திளைக் கின்ற நாடுகள், வளர்ந்து விட்ட நாடுகளுக்கு இந்த விளை யாட்டுப் பொருந்தும். வளர்கின்ற நாடுகளுக்கு, வளர்ச்சி: யடையாத நாடுகளுக்கு இது பொருந்துமா? ஏற்குமா? பயன் கிடைக்குமா? என்று பேசுபவர்கள் நிறைய பேர்கள் உண்டு.


அதுவும், ஜனத்தொகை பெருக்கத்தில் ஜெயித்துக் கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு, இப்படி நாட்களை வீணடித்து, மக்களை சோம்பேறிகளாக்கி, சும்மா குந்தி யிருக்கச் செய்கின்ற ஆட்டம், உற்பத்தியை வீணடித்து: மக்களை பாழடிக்கிறது என்பது தான் எதிர்ப்போரின் வாதம்.


அது எப்படி?


எதிர்ப்புகள் எவ்வளவு இருந்தாலும், எதிர்க்காற்றில் மேலேறிப் பறந்து பரபரப்பூட்டுகின்ற பட்டத்தைப் போல,