பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து இடக்கும் மனித சக்தி 31 &


என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல் லாம் நித்தமும் பொல்லாததே என்று கர்த்தர் கண்டார். தாம் பூமியில் மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப் பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமா யிருந்தது. அவர்களை நிக்கிரகம் பண்ணுவேன். அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்த்ாபமாக இருந்தது’ ( 11:) என் றார்.


இந்தக் குறிப்பை இங்கே எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. இறந்து போன மனிதர்களை கல்லறையில் புதைக்கும் பொழுது கூட ஏற்றத் தாழ்வு பார்த்த மக்க ளாகவே இந்த மனித இனம் அன்று முதல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதுதான்.


பனக்காரர்கள் இறந்த 2-l. ) , பாறைக்குள்ளே: சிறப்ப ான குகையாக அமைத்து, பத்திரமாக, விலை யுயர்ந்த பொருட்கள் சூழ, அடக்கம் செய்தனர். அந்தக் குகையும் சுத்தப்படுத்தப்பட்டது. நல்ல கதவுபோல பாறைக் கல்லால் செய்யப்பட்டு, மூடி வைக்கப்பட்டது.’


ஏழைகள் இறந்தால், அவர்கள் உடல் மந்தை வெளி யிலே, குழிதோண்டி, அதனுள்ளே உடலை வைத்து, அதைச் சுற்றி சிறு சிறு கற்களை வைத்து, அதற்கு மேலே, கல்லை :பும் மண்ணையும் போட்டு நிரப்பி, மூடிய பிறகும், அந்த கற்கள் மேல் சுண்ணாம்பு போல வெள்ளை வண்ணம் அடித்து சுட்டிக் காட்டப்பட்டது.


அதாவது, இது ஏழை ஒருவனின் கல்லறை. இதை யாரும் தொட்டு விடக் கூடாது. தொட்டால் தீட்டு என்ப தாகக் காட்டவே, மரணத்திலும் மாறாத மக்கள்; இவர்கள் தோன்றிய காலத்திலிருந்தே மாறவில்லை என்பது தானே இதன் உண்மை!