பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 3 I


ஆற்றின் பாதையில் தடையாக சிறுமேடு ஒன்று இருந்தால். சிறிய தடைதானே என்று அந்த ஆறு மேட்டின் மேலேறி கடந்து செல்கிறது.


ஆற்றின் பாதையில் பெரிய மேடு மலையாக இருந்தால் அந்த ஆறு அதற்காக அஞ்சாமல், தடுமாறி நிற்காமல் மலை யைச் சுற்றி ஒரமாகப் போகிறது. ஒதுங்கி ஒடுகிறது.


ஆமாம்! அந்த ஆறு தன் அற்புதப் பயணத்தை இலட்சிய நோக்கோடு ஏற்றுக்கொண்டு செம்மாந்து செல்கிறது.


அந்த ஆறு அப்படிச் சென்று வெற்றிப் பயணம் செல் கிறது என்றால், ஆறறிவு படைத்த நீங்கள்: அற்புதத் திறமைகளையும், அளத்தற்கரிய ஒப்பற்ற இளமையையும், வலிமைகளையும் வைத்து வளர்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் தடைகளைத் தாண்டிச் செல்ல முடியாதா என்ன?


.


முன்னேற்றத்தைத் தடை செய்யும் முனைப்புகளை முறியடித்து வெற்றி காண முடியாதா? உங்களால் நிச்சயம் முடியும்.


உங்கள் முன்னே நிற்கின்ற தடைகள் என்னென்ன, அவற்றிற்குரிய விடைகள் என்னென்ன என்பதை நானே உங்களுக்குக் கூறிவிடுகிறேன்.


நான் கூறும் விடைகள் நல்ல கற்பனைகள் அல்ல நடந்து முடிந்த சரித்திர சாதனை படைத்த ஒலிம்பிக் வீரர்கள் வாழ்க்கையில் முன்னேறிய கதைதான். நடந்த நிகழ்ச்சிகள் தான்.


பெருமைக்குரிய பி.டி. உஷா


‘தங்கப் பெண்’ (Golden Girl) என்று பொங்கும் பூரிப் புடன் உலக மக்களால் போற்றிப் புகழப்படும் நமது