பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


பி. டி. உஷா, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் நாயகியாக அல்லவா திகழ்கிறார்.


எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து வசதியற்ற வறுமை நிலையில் வசித்து, நாளைக்கு என்ன செய்வது என்று நலிந்த நிலையில் வாழ்ந்த பெற்றோர்களுடன் இருந்து, இன்று தன்னையும் உயர்த்திக் கொண்டு, தன் குடும்பத்தையும் செல்வச் செழிப்பில் வாழ்ந்திட வழி வகுத் துக் கொண்ட பி.டி. உஷாவை நீங்கள் நினைத்துப் பாருங்கள.


நம்பிக்கை ஒன்றின் துணையினால், இந்த நாடே போற்றும் அளவுக்கு உயர்ந்திருப்பதை நீங்கள் உணர்ந்திட -.


பதவியில் உயர்வு; பரிசோ லட்சம் லட்சமாக; பாராட்டோ பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக; வர வேற்போ வானளாவும் கர கோஷத்துடன்.


புரட்டிய பக்கமெல்லாம் பத்திரிக்கைகளில் உஷா வைப் பார்த்திருப்பீர்கள். எப்படி இந்த பெருமை வந்தது?


உழைப்பு... உழைப்பு தான்.


நம்பிக்கையுடன், தனது கடமையாக, உரிமையாக, முதன்மைக் காரியமாக ஓட்டத்தை ஒடிப்பழகியது தான். நீங்களும் ஒடுங்கள். நிச்சயம் உலகப் புகழ் பெற முடியும்.


ஏழ்மையும் வறுமையும்


நாங்கள் ஏழைகள்! எங்கள் வீட்டில் வறுமை வாட்டு கிறது! வெறுமை விரட்டுகிறது. துயரங்களோ தலைவிரித் தாடுகின்றன! இந்த நிலையில் நாங்கள் எப்படி ஒட முடியும் என்று சிலர் கேட்கலாம்.