பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 m டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


இலே தலை சிறந்த மாவீரன் என்ற பாராட்டைப் பெற்


றான்.


இரவு முழுவதும் காவல் காரன் பணி. காலையில் ஒட்டப் பந்தயத்திற்கான பயிற்சி. வறுமையும் இல்லா மையும் அவனைப் பின் வாங்கச் செய்ய முயன்றன. அவனோ தனது இலட்சியம் எல்லாம் ஒட்டப் பயிற்சி, உடற் பயிற்சி என்று, தானே ஒடி ஒடிப் பழகி வெற்றி பெற்றான். இன்று துருவ நட்சத்திரம் போல, விளையாட்டு வானில் துல்லிய மாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்.


அவனைப் போல ஆயிரமாயிரம் நீக்ரோ வீரர்கள். வீராங்கனைகள், ஒடுக்கப் பட்ட இனத்திலிருந்து வந்த வர்கள் தான். அவர்களது நம்பிக்கையும் நிலைமாறாத முயற்சியும்தான், அவர்களை உலகப் புகழ் பெற வைத்திருக் கிறது.


வயிறும் உணவும் :


எப்படியும் நமக்கு ஒரளவு உணவு வயிறாற கிடைக்கத் தான் கிடைக்கிறது. அதனை விரும்பி உண்பதும், நமக்குரிய இளமைக்கால வலிமையை வீணே செலவழித்து விடாமல் முனைப்புடன் வளர்த்துக் கொள்வதும் தான், நமது தலை யாய கடமையாகக் கொள்ளவேண்டும்.


மற்றவர்களைப் போல இல்லையே என்ற மனக்குறை யை மனத்தை விட்டு அறவே கழித்துவிடவேண்டும் அது தான் அறிவுடைமையாகும்.


கிடைப்பதை உண்ணுங்கள்; அதையும் ஆவலுடன் விரும்பி உண்ணுங்கள். உடல் உற்சாகமாக ஏற்றுக்கொள்ளும் உள்ளுக்குள்ளேயிருந்து ஆற்றலும் ஆண்மையும் பெருகித்


துள்ளும், நிச்சயம் உங்கள் முயற்சி வெல்லும்.