பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 3 5.


துணிந்து நம்பிக்கையுடன், தொடர்ந்து லட்சியத்துடன் இடைவிடாமல் உழைப்பவர்களுக்கு, சந்தர்ப்பங்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை உண்டுபண்ணி, சாதகமான பலன்களை அளிக்கும் என்பதுதான் சரித்திரம் கூறுகின்ற உண்மைகளாகும்.


நோய் என்ன செய்யும்?


எனக்கு நோய் வந்தது. உடல் பாதிக்கப்பட்டுவிட்டது, என்னால் எதுவும் செய்யமுடியாது என்று யாராவது பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால், பயப்பட வேண்டாம்.


ராய்எவ்ரி என்ற சிறுவன் கடுமையான விஷஜூரம் வந்து, அதன் விளைவாக, இளம்பிள்ளைவாதம் ஏற்பட்டு, படுத்த படுக்கையாக விழுந்து விட்டான்.


எவ்வளவோ வைத்தியம் செய்தாயிற்று. எந்தவிதமான பயனும் இல்லை. முயற்சி செய்த வைத்தியர்களும் முடியாது என்று கைவிரித்து விட்டனர்.


கடைசியாக விடை பெற்றுக்கொண்ட ஒரு மருத்துவர். எதற்கும் உடற்பயிற்சி செய்துபார்! சரியாகப்போனாலும் போகும் என்று சொல்லி விட்டுப் போனார் அதையே அந்த சிறுவன் தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டான்.


கஷ்டமாக இருந்தாலும், இஷ்டப்பட்டு அவன் உடற் பயிற்சிகளைத் தொடங்கினான். தொடர்ந்து செய்தான். நம்பிக்கையோடு செய்தான். நாளாக ஆக, அவனது முயற்சி கள் முன்னேற்றம் தரத் தொடங்கின.


வலுவில்லாத கால்கள் வலிமைபெற்றன. நடையில் கம்பீரம் வந்தது. துள்ளிக் குதிக்கும் அபார சக்தியை அளித்தது அதனால் அவன் தாண்டும் போட்டிகளில் கலந்து கொண்டான்.