இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4. ஓடிப் பழகும்போது உண்டாகும் நன்மைகள்
ஒட்டமும் நோட்டமும்
ஒட்டப் பயிற்சியின் போது. உடலில் உண்டாகு மாற்றங்களை நினைத்தாலே நெஞ்சம் மகிழும். நிலைத் தாலோ தேகம் குளிரும்.
ஒடுவது வேலையற்ற வேலை என்று சாடுபவர்கள் அநேகம். அவர்கள் விவரமற்றவர்கள். விவேகமும் இல்லா தவர்கள். வெறும் வாயை மெல்பவர்கள். வீணாகும் பேர் வழிகள்.
ஒடுவது மனிதன் செய்யக் கூடிய காரியமா! அது மிருகங்களுக்குத் தேவை. மனிதர்களுக்கு அநாவசியம் என்று ஆர்ப்பரிப்பவர்கள் அநேகம். அவர்கள் மனிதத் தவளைகள். மனிதன் என்ற பெயரிலே உலவும் வாயில்லா ஜீவன்கள். நடமாடும் பேய்கள்.
ஒட்டம் வாழ்க்கையின் ஆரம்பம். ஒட்டத்தில் வெற்றி பெற்ற ஒரு ஜீவ அணு தான் உடல் எனும் உருவத்தைப்