பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


தான், தசையின் சிறந்த Q)uuji 3; Lh (Tone) என்பார்கள். அப்படிப்பட்ட அமைப்பைத் தசைகள் பெறுகிறபோது, தேகம் அழகாகவும், கவர்ச்சியாகவும் மாறி விடுகிறது. அத் துடன், வேகம், வேலை செய்யும் ஆற்றல். விவேகம், மதி யூகம் இவற்றையும் தசைத்திறன் வளர்த்து விடுகிறது.


7. எலும்புகளின் வலிமையை வைத்தே, ஒருவரின்


உடல் அமைப்பை, தோரணையை (Posture) தெரிந்து கொள்ளலாம். நிமிர்ந்து நிற்கும் ஆற்றல், நிமிர்ந்து நடக்கும் கவர்ச்சி எல்லாம், வலிமையான எலும்புகள்


இருக்கும் வரை தான் இருக்கும்.


வலிமையற்ற எலும்புகள் எல்லாம் சீக்கிரம் முறிந்து போகின்றன. உடைகின்றன. காரணம், எலும்புகள் ஜோராக இருப்பதிலிருந்து கூடாக மாறிவிடுவதால் தான். ஒட்டம் தரும் உடற்பயிற்சியானது, எலும்புகள் வலிமை யிழப்பதிலிருந்து காப்பாற்றுகின்றன. வலிவை ஏற்படுத்து கின்றன.


8. உடலானது ஊளைச் சதைகளால் வளைக்கப்பட்டு, உடலில் அதிக எடை விழுந்து, குண்டாகி, அவஸ்தைப் படுவதிலிருந்து ஒட்டம் காப்பாற்றுகிறது. ஒட்டம் கொழுப்பைக் கரைக்கிறது. செல்களின் செழிப்பை மேலும் செழுமைப்படுத்துகிறது. செல்பிரிந்து வளரும் மெட்ட பாலிசம் என்ற தன்மையை விரைவுப்படுத்துகிறது பசியைக் கட்டுப்படுத்தி பக்குவமானதாக உடலை பரிணமிக்க


9. உணவை எளிதாக ஜீரணிக்கவும், குடற்பகுதிகளின் ஆற்றலை வளர்க்கவும் உணவைக் கிரகித்து, குப்பைகளை விரைந்து வெளியேற்றவும் கூடிய வலிமையை, ஒட்டம்


வழங்குகிறது.