பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

43



10. சோம்பலாக உள்ளவர்கள் தமக்குரிய வயதுக்கான தோற்றத்தைப் பெறாமல், விரைவாக முதுமை அடைந்து விடுகின்றார்கள். ஒட்டக்காரர்கள் வருடங்களில் வயதானா லும், உருவத்தில் வயதாகாத தோற்றம் கொண்டவர்க ளாக விளங்குகின்றார்கள். அதாவது, உடற்பயிற்சி அளிக்கும் ஒட்டம், வயதாவதை, முதுமையடைவதை. தாமதப்படுத்துகிறது. .


11 சிந்தனைகளில் தெளிவு, எண்ணங்களில் எழுச்சி. நினைவாற்றல், நேர்த்தியான கற்பனைகள். தெளிவாக எதிலும் முடிவேடுக்கும் தேர்ச்சியை ஒட்டம் உண்டாக்கி விடுகிறது.


12. எதற்கெடுத்தாலும் கவலைகள், சிறிய விஷயங் களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படுதல், குழப்பம் அடைதல், கோபப்படுதல் போன்ற படபடப்பான மனோநிலையைக் கொஞ்சங் கொஞ்சமாக மாற்றி அமைத்து, மனமாற்றத்தை சமைத்து அமைதியான சூழ்நிலையின் ஆனந்தத்தை அனு பவிக்க உதவுகிறது.


13. காரணம் தெரியாமலேயே குழப்பம் கொள்பவர் களைவிட, தேகத்தால் களைப்படைபவர்கள் அதிகம் பேர்கள் உண்டு. இத்தகைய களைப்பு எதனால் உண்டா கிறது? உடல் தளர்ச்சியினால்தான்.


ஒட்டமானது இரத்த ஒட்ட மண்டலத்தைத் தூண்டி, விரைவாக செயல்பட வைக்கிறது. அதிகமான உயிர்க் காற்றை உள்ளுக்கு இழுக்கச் செய்து, உடல்முழுவதிற்கும் அனுப்பி வைக்க உதவுகிறது, அதனால் சுறுசுறுப்பாகவும்


சுய எழுச்சியோடும் நாள் முழுதும் இருந்திட ஒட்டம் உதவு கிறது.


14. நோய்கள் இல்லாத தேகமே, இந்த உலகில் இல்லை என்பார்கள். உள்ளே அடங்கிக் கிடக்கும் நோய்கள்,