பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



உடல் நலிவு அடையும் நேரம் பார்த்து எழுச்சியடைந்து, வேதனைப் படுத்தத் தொடங்கி விடுகின்றன. ஆகவே, உடலை தளர்ச்சியடைய விடாமற் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகிறது.


தினந்தோறும் ஒடுகிற ஒட்டமும், செய்கிற உடற். பயிற்சியும், உயிர்க்காற்றை உள்ளிழுக்கும் ஆற்றலை அதிகப்படுத்தி, நோய்கள் தலையெடுக்காமல் தடுக்கின்றன. விரட்டுகின்றன. ஒழித்தும் விடுகின்றன.


பயங்கர நோய்களிலிருந்து காக்கின்ற பெருந்துணை யாக, ஒட்டம் உதவுகின்றது.


வாழ்விற்கு வளமான வழிகாட்டியாக விளங்கும் ஒட் டத்தில், நீங்களும் பங்கு கொள்ளலாமே!


மெதுவாக நடக்கின்ற நடை கூட உதவுகிறது. அதற். கான ஒரு சான்றைப் படியுங்கள்.


வாழ்வு தந்த விளையாட்டு


அந்த மனிதனுக்கு வந்திருக்கும் வியாதிகளோ அதிகம், அநேகம். வியாதிகளின் வீரியம் அந்த மனிதனை பாடாய் படுத்தி விட்டது. கேடாய் கெடுத்து விட்டது.


நீரிழிவு நோயின் கடுமையால், அவனது கண்கள் குருடாகிவிட்டன. அதைத்தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு, மரண அவஸ்தையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தொண்டையில் புற்றுநோய் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. இன்னும் ஒரு மோசமான நோய். கிட்னி செயல் படாமற் போனது.


இப்படி அடுக்கடுக்காக நோய்களின் ஆக்ரமிப்பு ஏற் பட்டும், அந்த மனிதன் ஆத்திரம் அடையவில்லை. நிதானம்