பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

45



  • H. H o zo. i இழக்க வில்லை. நேர்ந்த துன்பங்களால் வாழ்வை வெறுசி” வில்லை. தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. மாறாக, வாழ்வை மகிழ்ச்சியாக வாழ முயன்றான்.


எப்படி? பார்வை இருக்கும் போது, தான் விளையாடி மகிழ்ந்த கோல்ஃப் விளையாட்டை, மீண்டும் விளையாட முயற்சி செய்தான்.


வளைந்த குச்சியின் தலைபாகத்தால், சிறிய பந்து ஒன்றை குழிகளில் தள்ளிவிட்டு, ஆடுகிற ஆட்டம் கோல்ப்.


ஒரு நாய் அவனுக்கு வழி காட்டுகிறது. உதவி ஆள் ஒருவன் தடி ஒன்றை தரையில் தட்டி, குழி இருக்கும் இடத் தைக் காட்ட, பார்வை அற்ற அந்த வீரன், பக்குவமாகப் பந்தைக் குழிக்குள் தள்ளுகிறான்.


அதுமட்டுமல்ல. பார்வையுள்ள வீரர்களுடன் பந்தயம் கட்டி, போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெறுகிறான்.


நொந்து போகக் கூடிய வாழ்க்கையிலும், சிந்தை கலங்காது, ஆனந்த சிந்து பாடி மகிழும் அந்த மாவீரன், மகா மனிதனின் பெயர் டெரிவலஸ். வயது 42.


நலிந்த வாழ்விலும், எல்லாவற்றையும் இழந்து போன நிலையிலும் நம்பிக்கையூட்டி வாழச் செய்தது மட்டுமல்ல; மகிழ்ச்சியான மனோநிலையை அளித்தது. மட்டுமல்ல; உலகப் புகழையும் வாங்கித் தந்த விளையாட்டுக்கு இணை யாக, இந்த உலகில் வேறு எதுதான் உள்ளது.


விளையாட்டுக்கு நிகர் விளையாட்டுக்கள்தான்!