பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H ங்கம் மனித சக்தி 5 I மறைந்து கி.-?? g c?g


7g ஆகன்றி, 400 மீட்டர் தூரம் ஒடும் போது உதவு வகையில் தான் அமைந்திருக்கிறது.


ஆகவே, தசை நார்கள் வேகமாக இயங்கும் ஆற்றல் பெற்றிருந்து தங்களுக்குத் தாங்களே தேவையான சக்தியை விரைந்து உற்பத்தி செய்து கொள்கின்ற வல்லமையை பெற்று வளர்த்துக் கொண்டு; நொடிக்குள் நீண்டு விரிந்து சுருங்குகின்ற ஆற்றலையும் நிறைத்துக் கொண்டிருக்கும் போது தான், ஒருவரால் வேகமாக ஒட முடிகிறது.


இத்தகைய சக்தியும் சாமர்த்தியத் திறமையும், பாதி பிறப்பிலும் மீதி பயிற்சியாலும் கிடைக்கிறது. இந்தக் குறிப்பை அறிந்த பிறகே, விரைவோட்டத்தில் யாரும் கலந்து கொள்ளலாம். அதுவே வெற்றி பெறும் வாய்ப்புக் களை, மிகுதியாகவே அளித்து, ஆனந்தம் பெறச் செய்யும்.