பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


தப்பி ஓடிய காலத்தில் பள்ளங்களையும், மேடுகளையும்,


குழிகளையும், நீர்ப்பகுதியையும் தாண்டிக் குதித்த பழக் கமே, தாண்டும் போட்டிகளாக உருமாறி வந்திருக்கின்றன.


ஒடவும் தாண்டவும் முடியாமல், கிட்டத்திலே சிக்கிக் கொண்ட பொழுது, கல்லெறிந்து, கம்புகளை வீசித் தப்பிக்க முயன்று, பின்னர் குறிபார்த்து வீசிய முறைகளே, இன்று


எறியும் போட்டிகளாக ஆகியிருக்கின்றன.


தப்பிச் செல்லக் கூடிய நேரங்களில் தடைகளை ஏற் படுத்திய கற்கள், சிறு பாறைகள், மரத்துண்டுகள் போன்ற வற்றைத் துளக்கித் தள்ளி விட்டுச் சென்ற பழக்கமே, எடை துக்கிப் போட்டியிடுகிற அறிவை ஏற்படுத்தித் தந்தன.


இந்நாளில் ஏற்பட்டிருக்கின்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், நமது முன்னோர்கள் பெற்ற வாழ்க்கை அனு பவங்களின் முதிர்ந்த வடிவமாகும்.


மனிதன் ஒரு வேலை செய்யும் அறிவுள்ள மிருகம்’ என் கிறார் சூலி நக்கோடா என்பவர்.


உழைப்பே அவனது வாழ்க்கையாக அமைந்திருந்தது.


அந்த வாழ்க்கை மாறிய விதத்தைக் காண்போம்.


காலங்களும் கோலங்களும்


‘, இந்தியாவில் வேத காலம் என்பது வரலாற்றுக்கு அப்பாற்பட்ட காலம்’. அப்பொழுது வாழ்ந்த வேத கால மக்களின் வாழ்க்கை முழுவதும், உடல் உழைப்பாகவே இருந்து வந்ததால், இயற்கையாகவே அவர்கள் உடற்பயிற்சி செய்கின்ற வாய்ப்புள்ளவர்களாகவே விளங்கினார்கள். அதன் காரணமாக, அன்றாட வாழ்க்கையை ஆற்றலுடன் டத்திச் செல்ல அவர்கள் புதிய விளையாட்டையோ உடற்