பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


வாழ்க்கையை நடத்தத் தொடங்கியதும், குத்துச் சண்டை. மல்யுத்தம் போன்றவற்றில் ஆற்றலுக்காக ஈடுபட்டவர்கள். அதனையே பொருள் திரட்டும் போட்டிகளில் ஈடுபட்டதும், இதற்கு சான்றுகளாக அமைந்து விட்டிருக்கின்றன.


பொருள் உள்ள இயக்கம்


விளையாட்டு என்பது விளை + ஆட்டு என்று பிரி கின்றது. விளை எனும் சொல்லுக்கு விருப்பம் என்றும், ஆட்டு என்பதற்கு இயக்குதல் அதாவது உறுப்புக்களை இயக்குதல் என்றும் பொருள் கூறப்படுகின்றது.


நம்மையறியாமலேயே கைகளை கால்களை அசைப்ப தற்கு இயக்கம் (Movement) என்றும்; ஒரு நோக்கத்தையோ அல்லது பயனையோ கருதி உடலை இயக்குவதற்கு வேலை (work) என்றும்; சுவாசத்தை முறைப்படுத்திக் கொண்டு உடலுறுப்புக்களை இயக்கி, உடல் நலத்தையே முழு மூச்சாகக் கொண்டு செயல்படுவதை suffsho (Exercise, என்றும், மகிழ்ச்சி பெறுவதற்காக விருப்பம் போல் உடலை இயக்குவதற்கு விளையாட்டு என்றும் கூறுகிறோம்.


வருமானம் கருதி அல்லது மற்றவர்க்கு அடி பணிந்து, ஆணைக்கு உட்பட்டு அடங்கி, உறுப்புக்களை இயக்கியும் அந்தப் பணி முடித்த பிறகு ஆதாயம் எதிர்பார்த்தும்


இருப்பதையே வேலை என்கிறோம்.


ஆனால் விளையாட்டு என்பது தன்னிச்சையாக, தானே தனக்கு அதிகாரியாக இருப்பது போல இருந்து, உறுப்புச் களை இயக்கியும், அதன் மூலம் ஆடும்போதும், ஆடி முடித்த போதும் மகிழ்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் எதிர்பார்க் கின்ற இனிய நோக்கமாக அமைந்திருக்கிறது.