பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பயப்படுகின்றார் களா? அல்லது பாசத்தால் குழந்தைகள் படிக்க வேண்டாம் என்று விட்டுவிடுகின்றார்களா? அல்லது விளையாடினால் படிப்பு வராது என்று அவர்களே முடிவு கட்டி விடுகின்றார்


56/?


ஆக ஒன்று மட்டும் புரிகிறது. விளையாடுகிற மாணவர் களுக்கும் இளைஞர்களுக்கும் வீட்டில் இருந்து விழித்திருந்து படிக்கிற வாய்ப்பும் சூழ்நிலையும் குறைந்து போகிறது என்


பதுதான் உண்மை.


விளையாடாத மாணவர்கள்


விளையாட்டில் பங்கு பெறாத மாணவர்கள், நேரத் தில் வீட்டுக்கு வந்து, ஒரு தடவைக்குப் பல தடவை, பல மணி நேரங்கள் படிப்பதை, நாமும் பார்த்திருக்கிறோம்.


குவிந்த தோள்கள், குனிந்த தோற்றம், குழி விழுந்த கண்கள், கண்ணாடி அணிந்த கண்கள், மதமதப்பற்ற நடை. இப்படி பலஹlங்ைகளைக் கொண்ட மாணவர்களை யும் இளைஞர்களையும் நாம் சந்திக்கிறோம்.


அவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குவது, அதிக நேரம் படிப்பதால் தான். அதிக நேரம் படிப்பதனால், அவர்களுக்குப் பாடங்கள் புரிந்து போகின்றன. அதனால் தான், விளையாடாத மாணவர்கள், தேர்வில் வெற்றி


பெற முடிகிறது. நிறைய மதிப் பெண்களை எட்ட முடிகிறது


ஏன் முடியாது?


விளையாடுகிற மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாதா? சிறந்த வெற்றியை அடைய முடியாதா என்றால் ஏன் முடியாது என்று நாமும் கேட்கலாம். நிச்சயம் முடியும் என்று நம்பிக்கையுடன் கூறலாம். எப்படி?